Rock Fort Times
Online News

மலைக்க வைக்கும் பட்டியல்: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 96.88 கோடி பேர்…!

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது பாஜக. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டங்களின்போது, இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநில சட்டம் – ஒழுங்கு, வாக்குச்சாவடிகள் நிலை போன்றவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் அழியாத மை தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் சுமார் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், உலகில் அதிக வாக்காளர் கொண்ட நாடு இந்தியா என தெரிய வந்துள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை – 96,88,21,926 கோடி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 49,72,31,994 கோடி, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 47,15,41,888 கோடி, மூன்றாம் பாலித்தனவர்கள் – 48,044 ஆயிரம் ஆகும். மேலும், வாக்களிக்க தகுதி பெற்ற 18-19 வயதுடைய முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை – 1,84,81,610 கோடியாக உள்ளது. 20-29 வயதுடையவர்களின் எண்ணிக்கை – 19,74,37,160 கோடி, 80 வயதை தாண்டியவர்களின் எண்ணிக்கை – 1,85,92,918 கோடியாகவும் உள்ளது. 100 வயதை கடந்த வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 2,38,791 லட்சமாக உள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்