திருச்சி, சென்னை, கோவை, நெல்லை, மதுரை, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று(10-02-2024) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப்அலி என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பேர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அப்துல் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அஷ்ரப்அலி திருச்சி அல்லிமால் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். சகோதரர் அகமதுஅலி திருச்சி மேல்புலிவார்டு பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அஷ்ரப்அலியின் பாட்டி பாகிஸ்தானில் இருந்ததாகவும், அப்போது இந்த குடும்பத்தினர் சென்று வந்ததாகவும் பாட்டி இறந்த பின்னர் பாகிஸ்தான் யாரும் செல்வதில்லை என கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் ஒருவர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் இவர்களது உறவினர் கோவை குண்டுவெடிப்பின் போது அங்கே இருந்ததாக கூறப்பட்டதால் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.