திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் தில்சன் (வயது 9). இவன் திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 5- ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவதன்று வீட்டின் மாடியில் இருந்து தில்சன் தவறி விழுந்தான். இதில் தலையில் பலத்த காயமடைந்த தில்சனை லால்குடி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கிருந்துமேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.