மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு…!
மாவட்டச் செயலாளராக பாபுபாய் நியமனம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, மாவட்ட செயலாளராக ஏ.பாபுபாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, மாவட்ட அவைத் தலைவராக ஏ. ஷேக் தாவூத், பொருளாளராக எம். சையது முஸ்தபா, துணைச் செயலாளர்களாக எம்.ஷேக் அப்துல்லா, கே. அன்வர் பாட்சா, கே. ஷேக்மைதீன் ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர். நாசர் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.