ராமநாதபுரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழப்பு…!
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் என 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் (57) பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.