புனேவிலிருந்து 178 பயணிகளுடன் இன்று(10-06-2025) காலை சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் தரையிறங்க வேண்டிய அந்த விமானம் சிறிது நேரம் வானத்திலேயே வட்டமடித்து 15 நிமிடத்திற்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானம் தரையிறங்க முடியாமல் 15 நிமிடம் வானத்திலேயே வட்டமடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதேபோல அண்மையில் துபாயிலிருந்து 326 பயணிகளுடன் ‘துபாய் எமிரேட்ஸ்’ என்ற விமானம் சென்னை விமான நிலையம் வந்த போதும் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.