ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் கோட்ட ஆணையர் அபிஷேக் உத்தரவின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 1.2 கி.கி எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தது. அதனை ரயில்வே அதிகாரிகளிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அதனை கொண்டு வந்த நபர் யார்?, எங்கிருந்து கொண்டு வந்தார்? என்பது குறித்து உதவி ஆணையர் பிரமோத் நாயர், இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.