திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- பொதுமக்கள் தங்களது பெயரை சரி பார்த்துக் கொள்ள வேண்டுகோள்…!
https://rockforttimes.in/?p=36957&preview=true
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 140, திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி மற்றும் 141, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (29.10.2024) மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர்
வே.சரவணன் வெளியிட்டார். இதில், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,480, பெண் வாக்காளர்கள் 1,42,114 மற்றும் இதரர் 35 பேர் உள்ளனர். திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,902, பெண் வாக்காளர்கள் 1,32,128 மற்றும் இதரர் 71 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலினை பொதுமக்கள் ஐந்து மண்டலங்களில் சரிபார்த்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, திமுக பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, இளங்கோ, அ.தி.மு.க.பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், உதவி ஆணையர் த.சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.