Rock Fort Times
Online News

தெருவில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு…

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகன்களான சீனிவாசன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் தங்களது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தெருவில் பிஸ்டல் ரக துப்பாக்கி கிடந்தது கண்டு தந்தை ரமேஷிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரமேஷ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த துப்பாக்கியானது ஏர் பிஸ்டல் வகையை சேர்ந்தது என தெரிய வந்தது. ஸ்பிரிங் இயக்கத்தில் செயல்படும் அந்த துப்பாக்கியானது 10 மீட்டர் ரேஞ்ச் உள்ளது. இதற்கு உரிமம் தேவையில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஆர்ம்ஸ் ஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருவில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்