திருச்சி உறையூரை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). இவருக்கு இரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குணசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபோதையில் சாலை ஒரத்தில் உறங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்றிரவு குணசேகர் ராமலிங்க நகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் கல்லை எடுத்து குணசேகர் தலையில் அடித்ததில் மண்டை உடைந்து குணசேகர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிாிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவாின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பாிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.