Rock Fort Times
Online News

“பூத் ஸ்லிப்” மட்டும் போதாது: இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்…!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கின்றன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று( 17.4.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் நாளை மறுநாள் வாக்களிக்க செல்லும்போது வீடு, வீடாக வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் மட்டும் போதாது. கீழ்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* வாக்காளர் அடையாள அட்டை

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை

* புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

* தொழிலாளர் நல அமைச்சகத் தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை

* வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை

* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

* மத்திய, மாநில அரசுகள்/பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

* பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை

* இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்