Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு…!(வீடியோ இணைப்பு)

திருச்சி-திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல்  செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1200 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இன்று(29-08-2024) வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.  உடனடியாக அவர் இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் பள்ளிக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  அந்த மின்னஞ்சல் யார் அனுப்பியது?, எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து ராம்ஜி நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த  ஆர்.டி.ஓ. தட்சிணாமூர்த்தி பள்ளிக்கு சென்று அவரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறும்படி அவர் அறிவுறுத்தினார்.  இந்நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்