தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சப்- டிவிஷனில், ஏஎஸ்பி யாக பணியாற்றிய பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அநிக்கெட் அசோக்கும், விழுப்புரம் சப்- டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றிய சுரேஷு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திரகுமாரும், நாமக்கல் சப்- டிவிஷனில் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய ஆனந்தராஜுக்கு பதிலாக ஆகாஷ் ஜோஷியும், மதுரை மாவட்டம் திருமங்கலம் சப் டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றிய அருளுக்கு பதிலாக அன்சுல் நாகரும்
நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றிய யங்சன் டோமாவுக்கு பதிலாக லலித்குமாரும், தூத்துக்குடி டவுன் சப்- டிவிஷனில் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய கெல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திராவுக்கு பதிலாக மதனும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சப் – டிவிஷனில் ஏஎஸ்பி யாக பணியாற்றிய காயத்ரிக்கு பதிலாக மதிவாணனும், திருவண்ணாமலை டவுன் சப்-டிவிஷனில் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய ரவிச்சந்திரனுக்கு பதிலாக சதீஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்- டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றிய ஜெயச்சந்திரனுக்கு பதிலாக சருஷ்டிசிங்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப் டிவிஷனில் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய பாபு பிரசாந்துக்கு பதிலாக ஆகாசி அணில் வாக் ஹரேயும், தேனி சப்- டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றிய பார்த்திபனுக்கு பதிலாக கெல்கர் சுப்பிரமணிய பாலச்சந்தராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விகுஆக்மி தாம்பரம் ஏஎஸ்பிஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.