Rock Fort Times
Online News

காமராஜர் பிறந்தநாள்: 7740 புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்….

சென்னை மாவட்டம், நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்கள் அன்புப் பரிசாக வழங்கிய 7,740 புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலகப் பயன்பாட்டிற்காக அப்புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியி டம் வழங்கினார். விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன், சென்னை மாவட்ட கலெக்டர் மு. அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் , கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்