Rock Fort Times
Online News

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு முகாம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், ஓய்வூதியம் பெரும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் கைம் பெண்களுக்கான அவுட்ரீச் புகார்களை சரி செய்யும் சிறப்பு முகாம் இன்று ( 14.07.2023 )  தொடங்கியது. ஜெனரல் ஆபீசர் கமெண்டிங் தசின் பாரத், தலைமையகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் தலைமையில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் வழிகாட்டலில் இந்த முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் கலந்து கொண்டார். முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், இதனை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது . ஓய்வூதியம் நிலுவையில் இருந்த பயனாளிகளுக்கு அதற்கான தொகையை கலெக்டர் வழங்கினார். பின்னர், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு முறைப்படி பென்ஷன் வருகிறதா அல்லது அவர்களுக்கு வேறு ஏதும் தேவையுள்ளதா என்பது குறித்து பரிசீலனை செய்வதற்காக இந்த , முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. திருச்சியில் 2012ல், ஒரு பெண்ணின் கணவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது இறந்து விட்டார் – ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்ககுவதில் சிக்கல் இருந்தது. அதனை நாங்கள் சரி செய்து அந்தப் பெண்ணிற்கு ரூ.28 லட்சம் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்