Rock Fort Times
Online News

பழ வியாபாரியிடம் பணம் பறித்த 4 பேர் கைது…

திருச்சி கீழப்புலிவார்டு ரோடு வடக்கு தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் மணிமண்டப சாலை பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை இவர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெடுஞ்செழியனிடம் பணத்தை பறித்து சென்றது திருச்சி எடத்தெருவை சேர்ந்த அன்சாரி (24), ஆரோக்கியராஜ் (20), பிரசன்னா (21), அரியமங்கலம் எஸ்.ஐ.டியை சேர்ந்த முகமது ஆசிக் (19) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்