திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சுகுமார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் சுகுமார் புகார் கொடுத்தார்.
இதேபோல, சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த ராஜாவின் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இது குறித்து கோட்டை குற்றப் பிரிவு போலீசில் ராஜா புகார் கொடுத்திருந்தார். புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடியது நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.