Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டா்கள் இடமாற்றம் !

திருச்சி மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.தயாளன், அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சிவராமன், திருச்சி கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சட்டநாதன் பாலக்கரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனா் திருமதி எம்.சத்யபிரியா ஐபிஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்