Rock Fort Times
Online News

போட்டோ ஸ்டூடியோ, ஜெராக்ஸ் கடையில் அடுத்தடுத்து திருட்டு…!

மர்ம நபர்கள் கைவரிசை..

திருச்சி கீழக்காடு நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், இனாம்குளத்தூர் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடுத்த கடையில் பிரகாஷ் நண்பர் அந்தோணி ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார்.
இருவரும் வழக்கம் போல் இரவு 8 மணி அளவில் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு கடைகளில் ஷட்டர் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது ஸ்டுடியோவில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்றையும், ஜெராக்ஸ் கடையில் இருந்த லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது இதுகுறித்து பிரகாஷ், இனாம் குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்