வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்..
2 பேர் கைது- 3 பேருக்கு வலைவீச்சு..
திருச்சி அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் 2 பேர் வந்தனர். அந்த காரை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணி ஆகியோர் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்த காரில் 2 அரிவாள்கள் இருந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போது பெண்கள் உள்பட 3 பேர் அங்கு வந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து சந்திரமோகன் மற்றும் வெற்றிமணியை கையால் தாக்கியதுடன் போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தப்பி ஓடிய அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்( 29 ), அரியமங்கலம் காவேரி நகர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இளவரசன் மற்றும் ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ரவுடிகள் என்று கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.