திருச்சி சோமரசம்பேட்டை அருகிலுள்ள வாசன்வேலி 10-வது கிராஸ் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (வயது44). வெங்காய வியாபாரியான இவர் மதுரை மேலூரை சேர்ந்த தனலட்சுமி(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டு, வாசன் வேலி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்..
இந்நிலையில் சிவலிங்கம் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் கடந்த சனிக்கிழமை காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து தனலட்சுமி, தனது உறவினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். சிவலிங்கத்திடம் தனலட்சுமி செந்தில்குமார் இருவரும் சேர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஏற்பட்ட தகராறு நடந்துள்ளது. இதில் இரும்பு கம்பியால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் அவர்கள் சிவலிங்கத்தை கொலை செய்துள்ளனா். இதையடுத்து தனலட்சுமியின் உறவினரான ஆறுமுகம்(55), அவரது மனைவி சுமதி(42) ஆகியோர் உதவியுடன், சிவலிங்கத்தின் உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்க மணப்பாறை பகுதிக்கு ஒரு வேனில் கொண்டு சென்றுள்ளனர்.
சிவலிங்கத்தின் உடலை ஆம்னி வேனில் மூட்டையாக கட்டி மனைவி உட்பட மூன்று பேரும் மணப்பாறை பகுதிக்கு எடுத்து சென்றபோது ராம்ஜி நகர் போலீஸிடம் சிக்கி கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிவலிங்கத்தை கொலை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மனைவி தனலட்சுமி அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
நான் மதுரை மேலூரை சேர்ந்த எனது உறவினர் பிரபு என்பவரை முறைப்படி திருமணம் செய்து வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனக்கும், எனது கணவர் பிரபுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் எனது மகளை மதுரை மேலூரில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்தேன். மேலும் பிழைப்புக்காக எனது உறவினரான திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வெங்காய கடையில் வேலைக்கு சேர்ந்தேன் அப்போது அங்கு வெங்காய வியாபாரம் செய்த சிவலிங்கத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து, தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எனது 2- வது கணவரான சிவலிங்கம் தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இது பற்றி நான் எனது உறவினர் செந்தில்குமாரிடம் கூறினேன். எனக்கு அவர் ஆறுதல் கூறி வந்தார். இதனால் எனக்கும், செந்தில்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தோம். இந்நிலையில் சிவலிங்கம், விடுதியில் உள்ள எனது மகளை அழைத்து வந்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், என்னை விபசாரத்தில் ஈடுபடவும் கூறினார். மேலும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இது பற்றி செந்தில்குமாரிடம் தெரிவித்தேன். இதையடுத்து நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அவரை அடித்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து, கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என்று தனலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.