Rock Fort Times
Online News

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ரூ.4.27 லட்சம் வசூலித்து ஏமாற்றிய ஊழியர்..

திருச்சியில் போலீசார் விசாரணை

திருச்சி ஏர்போர்ட் ஜெ.கே. நகர் கோவில் தெரு பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் கம்பெனி அமைந்துள்ளது. இதில் திருச்சி ஜீயபுரம் கரியக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 32) என்பவர் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் வீடுகளுக்கு சென்று வசூல் செய்யும் தொகையை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. பின்னர் அலுவலக தணிக்கையில் சிவப்பிரகாசம் ரூபாய் 4 லட்சத்து 27 ஆயிரத்து 890 தொகையை கையாடல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மார்க்கெட்டிங் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் மதுரை அவனியாபுரம் மேலப்புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் ( 39 ) என்பவர் ஏர்போர்ட் போலீஸில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்