Rock Fort Times
Online News

வாயில் கருப்பு துணி கட்டி வந்து கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்….

திருச்சி திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டை தெற்கு தெரு, வடக்கு தெரு, கீழ தெரு பொதுமக்கள் இன்று ( 26.06.2023 ) திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ்சிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீதும், பெண்களை கேலி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழிப்பறி, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்