திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர் அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த அபாய சங்கு ஒலித்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து கானக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அந்த வங்கிக் கிளையின் மேலாளர் தேவராசு, போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லால்குடி பெருவளப்பூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (வயது 28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.