Rock Fort Times
Online News

கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி..

திருச்சி  அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் பாலு என்கிற மகாமுனி (வயது 55 ). லாரி டிரைவரான இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவரது ஒரு கை, கால் செயலிழந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே அவரது மனைவிக்கு, வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் அடிக்கடி மகாமுனி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதை பார்த்து மன வேதனை அடைந்த மகாமுனி மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு படுத்து தூங்கினர்.  அதிகாலையில் எழுந்த மனைவி, கணவர் மீதான கோபம் தீராமல் தண்ணீரை கொதிக்க வைத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் உடல் மீது ஊற்றியுள்ளார். இதில் அவரது இடுப்பு பகுதி வெந்து விட்டது. இதில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட கணவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்