Rock Fort Times
Online News

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

காவல் ஆணையரிடம் புகார்..

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக “லியோ” திரைப்படத்திலிருந்து “நா ரெடி” பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு அனிரூத் இசையமைக்க விஜய் பாடியுள்ளார். விஷ்ணு இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலில் விஜய் புகைபிடிக்கும் காட்சி மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் காட்சிகள் உள்ளது. ‘நா ரெடி’ பாடல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் உள்ளது. ஆகவே, நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்