நகர ஊரமைப்பு எல்லைக்குள் அனுமதி இன்றி செயல்படும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு..
நகர ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011- ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.75, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 14.06.2018-ல் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (Online) 14.16.2018 முதல் 13.09,2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரீட் மேல் முறையீட்டு மனுக்கள் எண்.233/2019 மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலததிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் நீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்மந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள , முகவரியிலும் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.