Rock Fort Times
Online News

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு..!!

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்ததால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனையில் இன்று ( 21.06.2023 ) அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் தற்போது சிகிச்சை நிறைவடைந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் வார்டுக்கு மாற்றப்பட்டார். அடுத்த சில நாட்கள் அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 90 நாட்கள் ஓய்வு தேவை என இதயநோய் சிகிச்சை நிபுணர் அருண் தெரிவித்துள்ளார். முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்