திருச்சி, நீதிமன்றம் அருகே ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குகிறார்கள். வழக்கமாக இந்த கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். கோடை காலத்தில் சுவையான நீர்மோர் வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் சீசன் என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள் மூலம் வருகிற 2-12- 2026 (புதன்கிழமை) காலை 10-30 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்தில் பங்கேற்பதன் மூலம் உடல் நலம் குன்றியவர்களுக்கு அது ஒரு மருந்தாகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கு அமுதமாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு அது ஒரு ஊட்டச்சத்தாகவும், சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. முன்னதாக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருப்பண்ண சுவாமி கோவிலில்
மாலை 6 மணி முதல் 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக இந்த அன்னதானம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.