மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் சம்பந்தப்பட்ட இடங்களிலும், சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களிலும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.