Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று(நவ.24) விசாரணை…. * ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு..!

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இன்று (நவ. 24) திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார். இதேபோல், திருப்பரங்குன்றம் கோயில், மலையின் சுற்றுப் பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்து டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 144 தடை உத்தரவால் கார்த்திகை தீப நாளன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கே பக்தர்கள் செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, விசாரணையின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்