Rock Fort Times
Online News

மருந்தியல் துறையில் மகத்தான பணி *திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.அகிலாண்டேஸ்வரிக்கு மாநில விருது…! 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3வது வாரத்தில் தேசிய மருந்தியல் வாரவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2026ம் ஆண்டுக்கான தேசிய மருந்தியல் வாரவிழா, இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மருந்தியல் துறையில் சிறந்து விளங்கிய 7 பேருக்கு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், மருந்தாளுநர்களின் சமூக பங்களிப்பு, மருந்துகளின் தரம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மருந்தியல் துறையில் சிறந்த ஆசிரியருக்கான விருது உட்பட நான்கு முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மருந்தியல் துறை வல்லுநருக்கான விருதை, திருச்சி சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறை தலைவரும் பேராசிரியருமான டாக்டர் எஸ். அகிலாண்டேஸ்வரி பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவ்உயரிய விருதை பெற்று கல்விப் பணியில் தனி முத்திரை பதித்துள்ளதோடு, திருச்சி, சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள பேராசிரியர் எஸ். அகிலாண்டேஸ்வரியை பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன், துணைவேந்தர் சி.கே. ரஞ்சன், பதிவாளர் எஸ் செல்வகுமார், துணை பதிவாளர் சதீஷ்குமார் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்