Rock Fort Times
Online News

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் ரூ.25 லட்சம் நிதியுதவி…* முதல்வர் விஜய் உத்தரவு..!

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி உதவி வழங்கி தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரிடம் முறையிட்டனர். அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி வழங்கப்படவுள்ளது. கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.10 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்