Rock Fort Times
Online News

தமிழகத்தில் இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்… பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய டிச.11 வரை அவகாசம்..!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நவம்பர்.12) வெளியிடப்படுகிறது. இதனைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார். சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். இன்று காலை 10 மணிக்குப் பிறகு வெளியாகும் இந்தப் பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் புதிதாகச் சேர்க்கவும், முகவரி மாற்றம் செய்யவும், தவறான விவரங்களைத் திருத்தவும், தகுதியற்ற பெயர்களை நீக்கக் கோரியும் விண்ணப்பிக்கலாம். இதற்காக டிசம்பர் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்படும். இதையடுத்து, 2027-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்