முதலமைச்சர் விஜயை இருட்டடிப்பு செய்யும் விஜயபாஸ்கரின் ஹிட்லரிச அரசியல்… * விராலிமலை தொகுதி விசில் கட்சியினர் கொதிப்பு! (வீடியோ இணைப்பு)
கவர்ச்சி வலை வீசி, நயவஞ்சகமாக பேசி, வாக்காளர்களை மயக்கி, ஓட்டு வாங்குவதில் கில்லாடி என்றால் அது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தான். 2026 பொதுத்தேர்தலில், விராலிமலை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, விஜயபாஸ்கரின் சுயரூபத்தை எடப்பாடி பழனிச்சாமி காலம் கடந்து உணர்ந்து விட்டார். இதனை சுதாரித்துக் கொண்ட விஜயபாஸ்கர், இனியும் அதிமுகவில் இருந்தால் தனது அரசியல் அஸ்தமனம் ஆகிவிடும் என நினைத்தார். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமானார். ஆனாலும், பதவி வெறி அவரைவிட்டு போகவில்லை. எனவே வரப்போகும் இடைத்தேர்தலில், த.வெ.க சார்பில் விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகி விடலாம் என கணக்கு போடுகிறார். விஜயபாஸ்கரின் தேர்தல் கணக்கு இந்தமுறை விராலிமலையில் பலிக்காது. அவரின் மாய வலையில் விழ வாக்காளர்கள் யாரும் தயாராக இல்லை என தொகுதி மக்கள் தெளிவாக பேசுகின்றனர். வெளியில் நினைப்பதுபோல விஜயபாஸ்கர் பெரிய திறமைசாலியெல்லாம் கிடையாது. அதிமுக கோட்டையாக அறியப்பட்ட விராலிமலையில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவ்வளவு தானே தவிர, இதற்கு காரணம் விஜயபாஸ்கர் என்கிற தனி மனிதன்தான் என அவர் நினைப்பது முற்றிலும் தவறு. ஊர் உலகமே உயிர் பயத்தில் அலறிய கொரோனா பேரிடர் காலத்தில் கூட, எதைப்பற்றியும் கவலைப்படாமல் கோடிகோடியாய் சம்பாதித்து ஊழலில் திளைத்தவர்தான் இந்த மாஜி மந்திரி விஜயபாஸ்கர். காலைப்பிடித்து காரியம் சாதித்துவிட்டு, பிறகு காலை வாரிவிடுவதை பாலிசியாக கொண்ட இவர், தொகுதிக்குள் தனக்கு இருக்கும் அதிருப்தியை சரிகட்ட ரேஷன் கார்டுகளை கணக்கெடுத்து விராலிமலை தொகுதி முழுவதும் தீபாவளி பரிசை விநியோகித்துள்ளார். அதில் தனது பெயரையும், போட்டோவையும் பிரிண்ட் செய்த விஜயபாஸ்கர், மறந்தும் கூட முதலமைச்சர் விஜயின் பெயரையோ, புகைபடத்தையோ சேர்க்கவில்லை. அதிலிருந்தே அவர் யார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்தபோது கடந்தாண்டு கொடுத்த பொங்கல் சீரிலும் தன்னை மட்டுமே விளம்பரப்படுத்திக்கொண்டார். அதிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ இடம்பெறவில்லை. அது அப்போதே தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போதும் தான் மட்டுமே பெரிய ஆள் என்கிற அகந்தையுடன் விஜயபாஸ்கர் செயல்படுகிறார். விஜயபாஸ்கரின் இந்த செயல் உண்மையான விசில் கட்சியினைரை கொதிப்படைய வைத்துள்ளது. இவர் கொடுக்கும் ரசகுல்லாவிற்கும், எவர்சில்வர் டிபன் பாக்ஸிற்கும் யாரும் விலைபோக தயாராக இல்லை. ஆகவே, விராலிமலை தொகுதியில் வெற்றி பெற நினைத்து விஜயபாஸ்கர் நடத்துகிற தேர்தல் கால டிராமாக்கள் சோசியல் மீடியாவில் வறுபட தொடங்கியுள்ளது.

Comments are closed.