Rock Fort Times
Online News

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் நாளை வெள்ளிக்கிழமை இயங்கும்…* தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

வருகிற நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது . பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். அதுபோல, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், எதிர்வரும் 08.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக இம்மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான (06.11.2026) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்