ரூ.100-க்கு 10 வகையான ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’… முசிறியில் தொடங்கி வைத்தார், த.வெ.க எம்எல்ஏ விக்னேஷ்!
வெளிச்சந்தையில் வெங்காயம் மற்றும் ஒரு சில
காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் இந்த காய்கறி தொகுப்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், முசிறி வட்ட வேளண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மக்கள் அங்காடி மளிகை பிரிவில், ரூ. 100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனை திட்டத்தை முசிறி
த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்பினை வழங்கினார். இந்தத் தொகுப்பில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், நகரக் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.