Rock Fort Times
Online News

த.வெ.க.வை வீழ்த்த அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திட்டமா?* மு.க.ஸ்டாலின் சொல்வதென்ன?

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. அதேபோல அதிமுக, நாம் தமிழர் கட்சிகளும் தோல்விகளை தழுவின. யாருமே எதிர்பாராத வகையில் கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகமே வாகை சூடி உள்ளது. இந்தநிலையில் அம்பா சமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக  சீமான் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தை வீழ்த்த சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க அதிமுகவும், திமுகவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுதொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொது
வேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை. அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால் இந்தப் பேச்சை யார் எடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தவெக கட்சிகாரர்களும், நிர்வாகிகளும் தான் இதனைத் திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டுமல்ல என் கட்சி பிள்ளைகள் அனைவரும் பொது வேட்பாளர்கள் தான். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
என்று கூறினார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு உண்டா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டதற்கு முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும்,
அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்