திருச்சி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 6.5 லட்சம் சதுரடியில் பிரம்மாண்டமான புதிய கல்வி வளாகம், ஆடிட்டோரியம்… * அடிக்கல் நாட்டினார், வேந்தர் அ.சீனிவாசன்!
திருச்சி, சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் உயர்கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், புதிய அகாடமிக் பிளாக் மற்றும் பிரம்மாண்டமான ஆடிட்டோரியம் ஆகியவற்றை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. வேந்தர் அ. சீனிவாசன் தலைமை தாங்கி, புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். சுமார் 3.6 லட்சம் சதுரடி பிரம்மாண்ட பரப்பளவில் இந்தப் புதிய கல்வி வளாகம் அமையவுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான அதிநவீன வகுப்பறைகள், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய செய்முறைக் கூடங்கள், நூலகம், தேர்வு கூடம் மற்றும் மாணவர்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் வகையிலான பல சிறப்பம்சங்கள் இடம்பெறும். மேலும், ஒரே சமயத்தில் மூவாயிரம் மாணவர்கள் அமர கூடிய அளவில் சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய ஆடிட்டோரியம் அமையவுள்ளது. பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு மைதானமும் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக செயலாளர் . நீலராஜ், ராஜபூபதி மற்றும் ராஜசேகர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், துணைப்பதிவாளர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புல முதல்வர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.