கோவை போத்தனூரைச் சோ்ந்த முகமது ரபீக் மொபைல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவா் தனது இருச்சகர வாகனத்தை விற்க olx இணைய தளத்தில் விளம்பரம் செய்திருக்கிறாா். இதனை பார்த்த ரமேஷ் என்ற நபர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகபப்டுத்தி கொண்டு வாகனம் தேவைப்படுவதாக தொிவித்து அந்த வாகனத்தை வெரைட்டி ஹால் பகுதிக்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா். எனவே முகமது ரபீக் தனது இருசக்கர வாகனத்துடன் வெரைட்டி ஹால் ரோடு பகுதிக்கு சென்றுள்ளாா். இருசக்கரவாகனத்தை பரிசோதித்த ரமேஷ், வாகனம் நன்றாக உள்ளது, அதனை வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவழியாக பேர்ம் பேசி 98,000 ரூபாய்க்கு வாகனத்தை வாங்கி கொள்வதாக ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தான் ரொக்கமாக தரமுடியாது, வங்கி கணக்கிலேயே பணத்தை செலுத்தி விடுவதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி முகமது ரபீக், ரமேஷ் அழைத்து சென்றுள்ள வங்கிக்கு சென்றுள்ளாா். அப்போது வங்கிக்கு வெளியே முகமது ரபீக்கை நிறுத்தி விட்டு வங்கிக்கு உள்ளே சென்ற ரமேஷ், பணம் கட்டியதற்கான ரசீதை எடுத்து வந்து முகமது ரபீக்கிடம் தந்திருக்கிறார். வங்கிகணக்கில் பணம் வந்துவிட்டதாக எண்ணி முகமது ரபீக், ரசீதை பெற்றுகொண்டு, இருசக்கர வாகனத்தை ரமேஷிடம் ஒப்படைத்துள்ளாா். உடனே வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ரமேஷ் கிளம்பியுள்ளாா். பிறகு அந்த ரசீதை கொண்டு வங்கியில் தனக்கு கணக்கை சரிபார்க்க சென்ற போது முகமது ரபீக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கி மேலாளரிடம் கேட்டபோது அப்படி ஒரு பரிசீலனையே நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். போலீயான ஒரு ரசீதை வாங்கிக்கொண்டு ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த முகமது ரபீக் வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கரவாகனத்துடன் தப்பிய நபரை தேடி வருகின்றனர்..