திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பவர்ஃபுல்லாக வலம் வந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் சுமார் ரூ. 100 கோடி அளவிற்கு லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவர் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, வருகிற நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சீண்டும் விதமாக, தற்போதைய திருவெறும்பூர் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில வருடங்களுக்கு முன்பு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த சிவாஜி படத்தில் வில்லனான ஆதிகேசவனை கைது செய்து சிறைக்கு அனுப்பும் போது நீதிமன்ற வளாகத்தில் ரஜினி பேசும் “என்னங்க இது இப்படி ஆகிப்போச்சு… படுபாவிங்க எல்லாரும் சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்களே…. உள்ள போய் என்ன பண்ணுவீங்க ஆதி.. கல்லு உடைப்பீங்களா?”… என நீளும் சினிமா வசனத்தையும் அன்பில் மகேஷ் போலீசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் காட்சிகளையும் இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இது அன்பில் மகேஷ் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்துள்ளது. கடந்த 2021ல் அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட நவல்பட்டு விஜி, சில வருடம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து த.வெ.க சார்பில் களமிறக்கப்பட்ட நவல்பட்டு விஜி, தேர்தலில் வெற்றிபெற்று தற்போது திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.