Rock Fort Times
Online News

வங்கக் கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்… 28-ம் தேதி கரையை கடக்கிறது..!

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (அக். 26) காலை 5.30 மணிக்கு மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகியுள்ளது. இதற்கு அா்னாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் ‘அர்னாப்’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து தீவிரப் புயலாகவும், மிக தீவிரப் புயலாகவும் வலுவடைந்து ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக அக். 28 (புதன்கிழமை) காலை கரையைக் கடக்கக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 140 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அர்னாப் புயலால் தமிழகத்திற்கு மழை பாதிப்பு இருக்காது. டெல்டா மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்