Rock Fort Times
Online News

நாதக நிர்வாகிகள் கைதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அக்.24-ல் ஆர்ப்பாட்டம்…!

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைதைக் கண்டித்து அக்.24-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து கைது செய்யப் பட்டுள்ளனர். தவெக அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் படி, அக்.24-ம் தேதி காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்