Rock Fort Times
Online News

காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று(அக்.10) சென்னை வருகை: முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டம்…!

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று(10-10-2026) சென்னை வருகிறார். தீவுத்திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, கல்லூரி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, மொழி, கலாச்சாரம், பெண் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
முன்பதிவு செய்து க்யூஆர் குறியீடு வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னை வரும் ராகுல், முதல்வர் விஜய்யை சந்தித்து, சமகால அரசியல் குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நாளை நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்