Rock Fort Times
Online News

மதுராந்தகத்தில் த.வெ.க; தாராபுரத்தில் அதிமுக முன்னிலை…!

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்னு ம் பணி இன்று(09-10-2026) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுக சுகன்யா 68 வாக்குகளும், அதிமுக பானுமதி 56 வாக்குகளும் பெற்றனர். மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் மரகதம் குமரவேல் 67 வாக்குகளும்,
திமுக பரந்தாமன் 55 வாக்குகளும், அதிமுக கணிதா சம்பத் 28 வாக்குகளும் பெற்றனர். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ண படுகின்றன. இதன் முதல் சுற்றில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 4164 வாக்குகளும், திமுக 3175 வாக்குகளும் அதிமுக 2481 வாக்குகளும் பெற்றுள்ளன. தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் 2539 வாக்குகளும், அதிமுக 1953 வாக்குகளும், திமுக 1424 வாக்குகளும் பெற்றன.

தாராபுரத்தில் திடீர் திருப்பம்,

ஆனால், தாராபுரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.
இரண்டாம் சுற்றில் அதிமுக 2934 வாக்குகளும் தவெக 2347 வாக்குகளும், திமுக 1997 வாக்குகளும், நாதக 352 வாக்குகளும், கம்யூனிஸ்ட் 37 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், அதிமுக 587 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்