ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி.அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ‘ரெய்டு’…!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூலை 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசகுமாரின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள அவரது மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (29-09-2026) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.