தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை முதன்மை நிர்வாக அலுவலராகவும் (Joint CEO), ‘மிஷன் ஒலிம்பிக் 2036’ திட்டத்தின் சிறப்பு அதிகாரியாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.மயில்வாகனனை நியமித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளராக இருந்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவரது சேவைகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.