Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி…- மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்..!

தமிழகத்தில் தற்போது மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் பங்கேற்று வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் வெங்கடேஷ், கார்த்திகா, செந்தில் முரளி, பிரபு, ராமதாஸ், கௌதம், அனு சுருதி, பரம்வீர், சுகேயில், டார்வின் முத்து, சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன்,
ஜானகிராமன், மூத்த வழக்கறிஞர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்