Rock Fort Times
Online News

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைந்தால் எங்கள் முடிவு வேறு மாதிரி இருக்கும்…- தவெக அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு அரசு சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்.19) பட்டினப்பாக்கம், சீனிவாசப்புர சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெ.சண்முகம், “எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்ப்பு வர தான் செய்யும் என செங்கோட்டையன் கூறுகிறார். எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எதிர்க்கவில்லை. எதிர்கால வளர்ச்சியும் கருத்தில் கொண்டு சட்டமன்றம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூறுகிறோம். கூட்டணிக் கட்சி ஆதரவுகளுடன் தான் இன்று தவெக ஆட்சி நடைபெறுகிறது. அப்படி இல்லை என்று நினைத்தால் எங்களுடைய முடிவு வேற மாதிரி இருக்கும்” என எச்சரித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்