Rock Fort Times
Online News

பாஜகவுடன் மறைமுக உறவில் இருப்பவர்கள் த.வெ.க.வினர் தான்…* முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி..!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை. சமூக நீதி, சனாதனம், முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நாங்கள் உடன்படவில்லை. தற்போது த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் மறைமுகமாக பா.ஜ.க.வுடன் உறவில் உள்ளனர். முன்பு ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது ஐந்து ஆயிரம் செலுத்துகிறார்கள். கிராமப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின்வெட்டுப் பிரச்சனை உள்ளது. மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு கிடைக்கவில்லை. இருமுனை மின்சாரத்தை வைத்து எப்படி விவசாயம் செய்வது?. எங்க அப்பா கோபக்காரர்; கொஞ்ச நாள் பொறுங்கள், என்னால் கட்சி நடத்த முடியாது, நான் தி.மு.க.வுடன் வந்து விடுகிறேன் எனக் கூறியவர் தான் துரை வைகோ. அவர் தற்போது ஏதேதோ பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்